Thursday, June 30, 2016

சுவாதி கண்ணீர் அஞ்சலி - சிவகவி

நண்பன் பிரபுவின் தகப்பனார் திரு.சிவகுமார் அவர்கள், 24-06-2016 அன்று பட்ட பகலில் ஆள் நடமாட்டம் உள்ள நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட சுவாதிக்காக படைத்த இதய அஞ்சலி.


சுவாதி உன்
மென் பொருள் மேனியை
வன் பொருள் கொன்றது
ஊரே பார்த்து
ஒதுங்கியே நின்றது
சுயநலம் நிறைந்ததால்
பொதுநலம் மறைந்தது
மலர் ஒன்று உதிர்ந்தது
மானுடம் தோற்றது!
 _சிவகவி_

No comments: